இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரா கோச்சர் அவர்கள் தன்னுடைய கணவரின் நிறுவனமான வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கிய கடனுக்கு கைது செய்யப்பட்டு தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரா கோச்சர் அவர்கள் தன்னுடைய கணவர் தீபக் கோச்சரரின் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.3250 கோடி கடன் வழங்கியுள்ளார். இந்த தகவல் வெளியே தெரிய வந்த நிலையில் மும்பை காவல் துறையினர் இருவரையும் 24.12.2022 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது இன்று (09.01.2023) பாம்பே உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.1,00,000/- செலுத்த சொல்லி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.