வயதான மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகளுக்கு அவர்கள் வீட்டில் வசிக்க உரிமை இல்லை: டெல்லி உயர்நீதிமன்றம் March 7, 2022

ஒரு பெண் தன் மாமியாரை தவறாக நடத்தினால், அவர்கள் வீட்டில் வசிக்க உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் மருமகளுக்கு மறுக்க முடியாத குடியிருப்பு உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

ஒரு பெண் கூட்டுக் குடும்பமாக தனது கணவருடன் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கீழ் நீதிமன்றத்தில் அணுகினார். அந்த கீழ் நீதிமன்றம் அவர் தங்குவதற்கான உரிமையை மறுத்தது அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கிற்காக டெல்லி உயர்நீதிமன்றம் வயதான மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகளுக்கு அவர்கள் வீட்டில் வசிக்க உரிமை இல்லை என்று தீர்ப்பு அளித்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *