SARFAESI சட்டம் – நீதிமன்றம் ஆணை
SARFAESI சட்டம், 2002 என்பது இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்கள் விற்க அல்லது ஏலம் விட அனுமதிக்கும் சட்டமாகும். ஒருவர் தனது சொத்தை வினயமாக வைத்து வங்கியில் கடன் வாங்கி அதை திருப்பி தராமல் இருக்கும் சூழ்நிலையில் வங்கி நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே கடன் செலுத்த தவறியவரின் சொத்துக்களை விற்க அல்லது ஏலம் விட அனுமதிப்பது SARFAESI சட்டமாகும்.
பிரிவு 34:- SARFAESI சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதி மன்றங்கள் மூலமாக பெறவே முடியாது. ஏனென்றால் அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
Amrik Singh vs DCB Bank என்ற வழக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது. Amrik Singh அவரது சகோதரர் உடன் சேர்ந்து 2 நிறுவனங்களை நடத்தி வந்தார். 2013-ல் DCB வங்கியில் தங்களது சொத்தை அடமானம் வைத்து 67 லட்சத்தை கடனாக பெறுகின்றனர். மேலும் 2015 இல் அதே கடனை 95 lakhs உயர்த்தி கடன் பெறுகின்றனர். ஆனால் அவர்களால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியவில்லை. 22/08/2019 இல் அந்த கடனை அடைக்க வங்கியை அணுகி வருகின்றனர் ONE TIME SETTLEMENT கேட்டு 10 லட்ச ரூபாய் DD யாக செலுத்துகின்றனர். ஆனால் வங்கி அந்த DD பணமாக மாற்றி கடனில் வரவை வைத்தனர். ஆனால் அவர்கள் சொன்ன தொகைக்கு வங்கி ஒப்புக்கொள்ளவில்லை. 18/6/2020 மீண்டும் 75 lakhs ONE TIME SETTLEMENT செலுத்துவதாக வங்கிக்கு ஒரு விண்ணப்பம் வைக்கின்றனர். ஆனால் வாங்கியோ அதை மறுக்கிறது மீண்டும் 16/7/2020 மீண்டும் அந்தத் தொகையை 85 லட்சமாக உயர்த்தி ஒரு புதிய விண்ணப்பம் வைக்கின்றனர். வங்கி அதை ஏற்று அதை மூன்று தவணையாக கட்ட வேண்டும் என்று அனுமதி அளிக்கின்றனர். 31/7/20 அன்று 25 lakhs ,30/8/20 அன்று 20 lakhs, 30/9/20 அன்று 40 lakhs செலுத்த வேண்டுமென்று வங்கி கூறுகின்றன. ஆனால் அவர்களால் 49 lakhs மட்டுமே கட்ட முடிகிறது, மீதமுள்ள 36 lakhs செலுத்த மேலும் நேரம் கேட்கிறார்கள். ஆனால் வங்கி அதை மறுக்கிறது. அதனால் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் WRIT FILE செய்கின்றனர் அந்த வழக்கில் JUSTICE RAMACHANDRA RAO மற்றும் JUSTICE JASJIT SINGH BEDI என்ற அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அதை விசாரித்த நீதிபதிகள் Amrik Singh கொரோனா காலத்தில் அவர்களால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து அவர்களுக்கு மேலும் கடன் தவணையை செலுத்த 90 நாட்கள் வழங்குகிறார்கள். மேலும் உயர்நீதிமன்றத்திற்கு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை தேதியை நீட்டிக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளிக்கின்றனர்.