உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் நடைபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வரவேற்பு விழாவில் உயர்திரு Attorney General K.K.வெங்கடேஷ் எடுத்துரைத்த இந்திய நீதிமன்றங்களின் வழக்குகளின் நிலுவை நிலை பட்டியல் எல்லோரையும் மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது என்று சொல்லலாம்.
கற்றறிந்த மாண்புமிகு நீதிபதிகள் முன்பாக Attorney General K.K.வெங்கடேஷ் தொடங்கி வைத்த வாதம் எல்லோரையும் புருவங்களையும் உயர செய்தது. ஏனென்றால் அதே காரணத்திற்காக இந்திய நீதிமன்றங்களின் நிலுவையில் உள்ள வழக்குகள் உலகில் உள்ள எந்த நீதிமன்றங்களிலும் இந்த அளவில் இல்லை என்பது புள்ளி விவரம் காட்டுகிறது. அன்றைய தினம் பேசப்பட்டது உலகில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கீழ் வரும் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளை முடிக்க முடியாமல் இந்நாள் வரை நிலுவைகள் அதிகரித்தே இருப்பது முரணாக பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றங்கள் நவீனப்படுத்தப்பட்ட பிறகும் இவ்வளவு எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
சிவில் வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் தேங்கியிருப்பது ஒருபுறம் இருந்தாலும் கிரிமினல் வழக்குகள் தேங்கியிருக்கும் காரணத்தினால் அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட அனுபவிக்க முடியாத நிலையில் சிறையில் பலபேர் உள்ளனர். சிறையில் உள்ள 76% கைதிகள், அவர்களின் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தினால் சிறையில் உள்ளனர். குறிப்பாக இந்த விகிதாசாரம் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாதது. இவ்வாறு கிரிமினல் வழக்குகளில் சிறையில் இருப்பவர்கள் பல ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாமல் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தண்டனை காலத்தையும் தாண்டி சிறை வாழ்க்கையை அனுபவித்து வருவது வேதனையாகும். இதற்கெல்லாம் நீதித்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே வழக்குகள் நிலுவையில் இல்லாத நிலையை அடைய முடியும், அதோடு நீதிபதிகள், அரசாங்கம், வழக்கறிஞர்கள் கூட்டாக சேர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நிலுவைகளுக்கு தீர்வாகும் என்ற கருத்து கூட்டத்தின் முடிவில் எடுத்துரைக்கப்பட்டது.
புள்ளி விவரம்:
- இந்திய நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- இந்திய நீதிமன்றங்கள் 50% நீதிபதிகளை வைத்து இயங்குகிறது,
- விசாரணை நீதிமன்றங்களில் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- சிறையில் உள்ள கைதிகளில் 76% கைதிகள் விசாரணை கைதிகளாக உள்ளனர்.