விடிவு தெரியாத சிறைவாசம்

11 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருக்கும் ஒருவருக்கு ஜாமின் வழங்கியது அலகாபாத் நீதிமன்றம். புதிய வழக்கறிஞர்களை அதுபோல் உள்ள வழக்குகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

 ARTICLE 21

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 படி எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையை பாதிக்கப்படுதல் கூடாது. 

No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law, nor shall any person be denied equality before the law or the equal protection of the laws within the territory of India.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்திற்கு வந்த வழக்கான saudan singh vs state of uttar Pradesh (crl.appeal no. 308/2022) அதில் மீண்டும் பல விசாரணைக் கைதிகள் பல வருடங்களாக சிறையில் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 படி அவர்களின் உரிமையை பாதிக்கப்படுவதாக கூறி உள்ளது. நீதிபதி  saurabh shyam shamshery அவர்கள் அடங்கிய அமர்வு தற்பொழுது உள்ள அகிலேஷ் விசாரணைக் கைதி பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கீழ் நீதிமன்றத்தால் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது சட்ட உதவி எதுவும் கிடைக்காததால் அன்று முதல் 11 ஆண்டுகளாக காத்திருக்க நேர்ந்தது 2021 ஆம் ஆண்டு தான் அவர் தனது முதல் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல்  செய்தார் மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு மேலும் 11 ஆண்டுகளாக ஒரு விசாரணைக் கைதியாக சிறையில் இருப்பது அவரது உரிமையை பறிப்பது என்பது ஒரு கொடுமையான செயல் என்று கருதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.நெடுங்காலமாக விசாரணைக்கைதியாகவே வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி விசாரணைக்கைதியாகவே இருக்கும் நபர்களுக்கு இந்த தீர்ப்பு விடிவை கொடுக்கும்  வறுமையின் காரணமாக சட்ட உதவி கிடைக்காமல் இருப்பது வருந்ததக்கது. அதனால் இளம் வழக்கறிஞர்கள் மேற்கூறியவாறு வழக்குகளை கவனம் செலுத்துமாறு வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *