கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த இந்திய நீதிமன்றம்
இந்தியாவில் கூகுள் நிறுவனம் வணிக போட்டி சட்டத்தினை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது இந்திய வணிக போட்டி ஆணையம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியானது தன்னை எதிர்க்கும் நிறுவனத்துடன் போட்டி போட்டு தன்னுடைய வளர்ச்சியை காட்டும், இதனால் ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சியும் மேம்படும், இதனால் இந்தியாவின் வளர்ச்சியும் உயரும் இதனை கருத்தில் கொண்டு தான் இந்திய வணிக போட்டி சட்டத்தினை உருவாக்கியது. ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைலில் ஒரு தரவுகளை தேடும் பொழுது அது கூகுள் நிறுவனத்தை சார்ந்த தரவுகளையே முன்னிலைப்படுத்தி காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உதாரணமாக ஒரு செல்போன் வாங்குவதற்காக நாம் கூகுளில் தேடும் பொழுது கூகுள் சார்ந்த பொருட்களையே முன்னிலைப்படுத்தி காண்பிக்கும். இதனால் சாம்சங், எல்ஜி போன்ற பிற நிறுவனங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல் கூகுள் ஒரு ஆதிக்க போக்கை பின்பற்றுகிறது இது இந்திய வணிக போட்டி சட்டம், 2002-ன் படி குற்றம் என கூறி இந்திய வணிக போட்டி ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதனை ஆராய்ந்த தீர்ப்பாயம் கூகுள் நிறுவனத்தின் மீது ரூ.1337 கோடி அபராதமும் மேலும் இடைக்கால நிவாரணம் எதுவும் இல்லை என கூறி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்திடம் இடைக்கால தடைக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை ஆராய்ந்த தீர்ப்பாயம் அபராதத்தில் குறைந்தது 10% முதலில் செலுத்துங்கள் பின்னர் தான் நீங்கள் கோரிக்கை வைக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது. இதனால் கூகுள் நிறுவனம் முதலில் ரூ.133.7 கோடியை முதலில் அபராதமாக செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது.