செல்லப் பிராணிகளுக்கு சட்டம் செல்லாது

செல்லப் பிராணிகளுக்கு சட்டம் செல்லாது

செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அந்த செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளாகக் கருதலாம், ஆனால் செல்லப் பிராணிகள் மனிதர்கள் அல்ல, எனவே மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது காயம் அல்லது காயத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களுக்காக IPC இன் பிரிவு 279 மற்றும் 337 இன் கீழ் ஒரு நபர் மீது பதிவு செய்ய முடியாது.  பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்த வழக்கில் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியருக்கு எதிரான எஃப்ஐஆரை ரத்து செய்தது. மரைன் டிரைவ் அருகே சாலையை கடக்க முயன்ற போது வளர்ப்பு நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது அதனால் திடீரென பிரேக் போட்டதால் மோட்டார் பைக் சறுக்கியதால் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர் காயமடைந்த நிலையில் விபத்துக்கு காரணமான நாயும் விபத்தால் இறந்தது.

இதன் அடிப்படையில் மரைன் டிரைவில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் திரிப்தி ஆர் ஷெட்டி மூலம் வாதிட்ட மானஸ் மந்தர் காட்போல் (20) என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மோஹிதே-தேரே மற்றும் நீதிபதி சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு டிசம்பர் 20, 2022 அன்று இந்த உத்தரவை வழங்கியது.  .

வழக்கில் உள்ள விஷயங்களை ஆராய்ந்த பிறகு, நீதிபதி அமர்வு, “சந்தேகமே இல்லை, ஒரு நாய்/பூனை குழந்தையாகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ அதன் உரிமையாளர்களால் வளர்க்கப்படலாம் ஆனால் அடிப்படை உயிரியலில் அவைகள் மனிதர்கள் அல்ல என்று நமக்கு சொல்கிறது. IPC இன் 279 மற்றும் 337 பிரிவுகள் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது காயம், காயத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்கள் தொடர்பானது. எனவே, சட்டப்பூர்வமாகச் சொன்னால், கூறப்பட்ட பிரிவுகள் இந்த வழக்கிற்கு பொருந்தாது….” “மனுதாரர் உணவுப் பொட்டலத்தை வழங்குவதற்காக பைக்கில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்து அதனால் விபத்து ஏற்பட்டு நாய் இறந்ததற்கு மனுதாரருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் மனுதாரருக்கு மாநில அரசு ரூ.20,000 வழங்க உத்தரவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *