விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகையை மாற்றியமைத்து அதிகப்படுத்தி இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது குஜராத் நீதிமன்றம்.
விபத்துகளில் மாட்டிக் கொள்பவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பது “Motor Vehicle Act, 1988” “மோட்டார் வாகன சட்டம், 1988”
மோட்டார் வாகனங்களினால் ஏற்பட்ட விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய இழப்பீடு மனுவை எங்கு தாக்கல் செய்யலாம்?
1. விபத்து நடந்த இடத்தில் இருக்கும் தீர்ப்பாயம்.
2. விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் அல்லது தொழில் நடத்தும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம்.
3. எதிர் மனுதாரர் வசிக்கும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம்.
Aartiben Ramesh shing Tomar vs Nasuraddin Chandubhai Fakir
Coram:- Justice Ashokkumar C.Joshi
என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ரூ.30,000/- இழப்பீடாக அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பாயம் (Tribunal) தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் அதை மாற்றி உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விபத்தில் அடிபட்டவருக்கு 10%, ஊனம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பதை பின்பற்றி குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.