அதாள பாதாளத்தில் ஆதானி

அதாள பாதாளத்தில் ஆதானி
இந்தியாவின் நான்கு திசைகளிலும் தன்னுடைய வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது போல் காட்டி அதன் தொடர்ச்சியாக இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளில் வியாபாரத்தை பெருக்கி வரலாற்றிலேயே மிக வேகமாக வளரும் தொழில் நிறுவனம் தன்னுடைய நிறுவனம் என்று உலகமக்களுக்கு போலியான பிம்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பல ஆயிரம் கோடி வருவாயை தன்னுடைய நிறுவனத்தின் பங்குகளின் மூலம் ஈர்த்து அதன் காரணமாக உலகின் பணக்காரர்களின் முதல்வராகவும் அவருடைய நிறுவனம் முதல் நிறுவனமாக காட்டி இதுவரை ஏமாற்றிவந்த அதானியின் நிறுவனத்தின் கணக்குகள் வெட்டவெளிச்சமாகி உள்ளது. முழுகணக்கும் அதானியின் கணக்கு. பரவலாக சொல்லப்படும் பழமொழியான “காந்தி கணக்கு” என்பதுபோல் இது “அதானி கணக்கு” ஆகிவிட்டது. HINDENBURG RESEARCH என்ற நிறுவனம் நடத்திய 2 வருடகால ஆய்வில் அதானியின் மொத்த கணக்கு வழக்குகளும் புள்ளிவிவரத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன நிறுவனத்தின் ஆய்வின்படி அதானியின் மொத்தசொத்தானது ஆதானி குறிப்பிடுவதுபோல் அல்லாமல் பலமடங்கு குறைவாக உள்ளது, அதானியின் முக்கிய 7 நிவனங்களில் ஐந்து நிறுவனங்கள் CURRENT RATIO என்பது ஒன்றுக்கும் குறைவாக உள்ளது.
CURRENT RATIO = CURRENT ASSETS / CURRENT LIABILITIES, அதாவது ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்தைவிட கடன் அதிகமாக இருந்தால் CURRENT RATIO ஒன்றுக்கு குறைவாக இருக்கும், அவ்வாறு இருந்தால் அந்த நிறுவனம் அதிகமான நஷ்டத்தை சந்தித்துக்கொண்டு வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மேலும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதானியின் நிறுவனங்கள் $20 பில்லியன் மதிப்பு கொண்டிருந்தது ஆனால் இந்த 3 ஆண்டுகளில் அதன் மதிப்பு $120 பில்லியன் ஆகிவிட்டது, அதாவது 819% வளர்ச்சி அடைந்துள்ளதாக அதானி போலியாக ஒரு மாயை உருவாக்கினார். இதனால் தற்பொழுது அவருடைய அனைத்து நிறுவனங்களின் மதிப்பு 17.8 Trillion ஆகிவிட்டது (ஒரு Trillion = 1000 கோடி), இது அனைத்தும்‌ அதானியின் நிறுவனங்களின் தன்னுடைய மிகவும் நெருங்கிய சொந்தங்களை இயக்குனர்களாக பதவி கொடுத்து அவர்கள் மூலம் இந்த போலியான பிம்பத்தை ஏற்படுத்தினார் அதில் அதானியின் தம்பி ராஜேஷ் அதானி 1999 மற்றும் 2010 இரண்டுமுறை இந்திய அரசாங்கத்தின் (DIRECTORATE OF REVENUE INTELLIGENCE) சட்டப்படி கைதுசெய்யப்பட்டுள்ளார், அதானியின் சகோதரியை திருமணம் செய்த சமீர் வோரா, மற்றொரு நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார், ராஜேஷ் அதானி கைது செய்யப்பட்ட வைரமோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் சமீர் வோரா. அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி MAURITIUS, UAE, CARRIBEAN மற்றும் CYPRUS போன்ற நாடுகளில் நிறுவனங்கள் இருப்பதுபோல் SHELL COMPANIES உருவாக்கி அதன்மூலம் பல கோடி லாபம் ஈட்டியதுபோல் ஆவணங்கள் தயார் செய்து அதானியின் நிறுவனங்கள் லாபத்தில் செயல்படுவதுபோல் ஒரு போலியான மாயை உருவாக்கினார், அதன்மூலம் அதானியின் நிறுவனத்தின் பங்குகள் மிக உச்சநிலையை அடைந்தது, அதன்மூலமாக வங்கிகளிடம் பல கோடிகள் கடனாக பெற்றுள்ளார் இவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. HINDENBURG RESEARCH நடத்திய ஆய்வில் அதானியின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்ததால் ஒரே நாளில் அவருடைய நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 46 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது, இதனால் பொதுமக்கள் அதானியை நம்பி அவருடைய நிறுவனத்தின் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது இதன்பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் என்பது உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *