சேவை குறைபாடு – இழப்பீடு

சேவை குறைபாடு – இழப்பீடு
மாவட்ட நுகர்வோர் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் ஆணையம் OLA என்ற நிறுவனத்தின் சேவையால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய்.15,000 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு தீர்பளித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புகார்தாரர் OLA என்ற நிறுவனத்தில் வாடகை காரை புக் செய்துள்ளார், அந்த நிறுவனத்தில் 8 மணிநேரம் அல்லது 80 KM என்ற ஒரு சேவை உள்ளதாகவும் அதில் இரண்டில் ஒரு சேவையை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவரும் 8 மணிநேரம் என்ற சேவையை பதிவு செய்து தன்னுடைய நண்பர்களுடன் பயணத்தை தொடங்கி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்ததுபோல் OLA நிறுவணம் அனுப்பிய வாகனத்தில் அவர்கள் பயணம் செய்த எட்டு மணி நேரமும் அந்த காரில் குளிரூட்டி(AC) வேலை செய்யவில்லை, இதனால் அன்றே OLA நிறுவனத்தில் புகார் செய்து உள்ளார், ஆனால் OLA நிறுவனமோ குளிரூட்டி என்ற சேவைக்கு தனியாக புகார்தாரர் பதிவு செய்து உள்ள சேவையில் கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் அதனால் ஏதும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார், இதனால் பாதிக்கபட்டவர் OLA வின் மேலதிகாரிகளிடம் புகார் செய்து உள்ளார். அதன் விளைவாக பாதிக்கபட்டவரின் வங்கி கணக்கிற்கு 100 ரூபாய் இழப்பீடாக OLA நிறுவணம் அனுப்பிவைத்தனர், இதனால் அதிர்ச்சி அடைந்த புகார்தாரர் மாவட்ட நுகர்வோர் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் ஆணையத்தில் புகாரளித்தார், இதனை விசாரித்த அந்த ஆணையம் புகார்தாரருக்கு OLA நிறுவனம் 15000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *