செய்யாத குற்றத்திற்கு சிறை சென்ற நிரூபருக்கு தாமதமாக கிடைத்த ஜாமீன்

செய்யாத குற்றத்திற்கு சிறை சென்ற நிரூபருக்கு தாமதமாக கிடைத்த ஜாமீன்
கடந்த அக்டோபர் மாதம் 2020-ல் கேரளாவை சேர்ந்த Azhimukham என்ற பத்திரிகை சேர்ந்த சித்திக் காப்பான் என்ற நிருபர் உத்திரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
14, செப்டம்பர் 2020-ல் 19 வயதான தலித் பெண் உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு நபர்களால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த பெண் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண் இறந்து விட்டார். அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை பதிவு செய்யாமல் அந்த பெண் இறந்த பின்னர் மறுநாள் 20 செப்டம்பர் 2020 அன்று தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அந்தப் பெண் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய செய்யப்படும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் கற்பழிக்கப்பட்டு அவளின் முதுகெலும்பில் உள்ள C1 – C7 Vertebrate பகுதிகள் அதிகமான தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவு வந்தது.
இந்த கோர சம்பவத்தின் உண்மையை அறிய சம்பவ இடத்திற்கே சென்று தகவலை திரட்ட சித்திக் காப்பான் அங்கு சென்றார். போதிய தகவலை சேகரித்து விட்டு அவர் வரும் பொழுது சித்திக் காப்பான் அங்குள்ள காவலர்களால் கைது செய்யப்படுகிறார். கைது செய்த காவலர்கள் அவர் மீது போலியான வழக்கை புணைந்து சிறையில் அடைத்தனர். அந்த போலி வழக்கில் இருந்து அவருக்கு 9 செப்டம்பர் 2022-ல் ஜாமீன் கிடைத்தது. மேலும் அவர் சிறையில் இருந்த போதே 2020-ல் UAPA (UNLAWFUL ACTIVITIES PREVENTION ACT,1967) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழும் மற்றும் PMLA (PREVENTION OF MONEY LAUNDERING ACT 2002) பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் என மேலும் இரண்டு வழக்கை அவர் மேல் புணைந்து மீண்டும் அவர் சிறையில் இருக்கும் பொழுதே வழக்கு போடப்பட்டது. ஆகஸ்ட் 2022-ல் (UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஜாமீன் கிடைத்தது. தற்பொழுது (PMLA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது, இரண்டு ஆண்டுகள் கழித்து லக்னோ சிறையிலிருந்து சித்திக் காப்பான் வெளியே வர உள்ளார். ஒரு கோர நிகழ்வின் உண்மையை வெளி உலகிற்கு தெரிவிக்க நினைத்த நிருபர், செய்யாத குற்றங்களுக்காக சிறை சென்று வெளியே வர உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *