ஆசிரியர்கள் மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக தண்டித்தால் அது குற்றமாகாது என பாம்பே உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை தீர்ப்பு

ஆசிரியர்கள் மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக தண்டித்தால் அது குற்றமாகாது என பாம்பே உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை தீர்ப்பு
கோவாவில் ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒரு மாணவன் தன்னுடன் பயிலும் வேறு ஒரு மாணவரின் குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்தி உள்ளார். இந்த செயலுக்காக ஆசிரியர் ஒருவர் Roller Scale கொண்டு அடித்து தண்டித்ததாக கூறி வேறு ஒரு மாணவரின் குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்திய மாணவரின் தந்தை புகாரளித்துள்ளார். இதனால் அந்த ஆசிரியர் மீது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 324 மற்றும் கோவா குழந்தைகள் நல சட்டம், பிரிவு 8(2) கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
(இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code), பிரிவு 324:- துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடி மருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலும் அது சாத்தியமே, எனவே இவற்றில் ஏதாவது ஒற்றைப்பயன்படுத்தி தன்னிச்சையாகக் காயம் உண்டாக்குவது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்)
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அந்த ஆசிரியருக்கு ரூ.1,10,000/- அபராதமும், ஒரு நாள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த ஆசிரியர் மேல் முறையீடை பாம்பே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். Rekha Faldessai vs State of Goa என்ற வழக்கில் ஆசிரியருக்காக வழக்கறிஞர் அருண் டேசா வாதாடினார், அதில் அந்த ஆசிரியர் Roller Scale கொண்டு மாணவனை தண்டிக்கவில்லை என்றும் அந்த மாதிரியான பொருள் அங்கு இல்லவே இல்லை என்று வாதாடினார். வழக்கின் தன்மையை அறிந்த நீதிபதி பரத் P. தேஷ்பாண்டே, மாணவர்கள் ஒழுக்கத்தை கற்கவே பள்ளிக்கு வருகின்றனர். அவ்வாறு பள்ளியில் ஒழுக்கத்தை மீறும் பட்சத்தில் அதை தண்டிக்கவே ஆசிரியர்கள் உள்ளனர். ஆனவே அவருக்கு வழங்கிய தண்டனைகள் பொருந்தாது என கூறி தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *