விமானப்படையில் ஊழல்! வெளிநாட்டவருக்கு ஜாமீனை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!!

விமானப்படையில் ஊழல்! வெளிநாட்டவருக்கு ஜாமீனை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!!
இத்தாலி நாட்டில் உள்ள Fameccanica என்ற நிறுவனம் பாதுகாப்பு படைகளுக்கு Defence Force Equipment தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் Agusta Westland Helicopters என்ற ஹெலிகாப்டரை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. 2012-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு, Fameccanica என்ற நிறுவனத்திடமிருந்து 12 Agusta Westland Helicopters வாங்குவதற்கு சுமார் 3600 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் Fameccanica நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பான Agusta Westland Helicopters விற்பதற்கு இந்தியாவில் உள்ள சில முக்கிய நபர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஊழலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் CEO Bruna 2013-ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வால் 2014-ஆம் ஆண்டு Agusta Westland Helicopters வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஊழல் வழக்கை விவரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சில முக்கிய தலைவர்கள் பயன்படுத்துவதற்காக வாங்க இருந்த ஹெலிகாப்டர் ஏலத்தில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவில் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர்கள் குறைந்தபட்சம் 6000 மீட்டர் பறக்க வேண்டும். ஆனால் Fameccanica தயாரிக்கப்படும் Agusta Westland ரக ஹெலிகாப்டர்கள் 4500 மீட்டர் உயரம் மட்டுமே பறக்கும். அதனால் இந்த நிறுவனம் ஏலத்தில் பங்கேற வாய்ப்பே இல்லாத நிலையில் எவ்வாறு ஏலத்தில் பங்கேற்றது என்று விசாரணை செய்ததில், அப்போதைய விமானப்படையின் தலைமை அதிகாரி S.P.Tyagi முறைகேடாக 6000 மீட்டர் பறக்க வேண்டிய விதிமுறையை 4500 மீட்டர் என மாற்றி அதன் மூலம் Fameccanica என்ற நிறுவனத்தை ஏலத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளார். இதன் பின்னனியில் Fameccanica என்ற நிறுவனம் Christian Michel, Guido Haschke, Carles Gersosa என்ற நபர்கள் மூலம் 42.27 மில்லியன் யூரோவை லஞ்சமாக கொடுத்து அதன்மூலம் அந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை விற்க ஏற்பாடு செய்துள்ளனர். இதில் லஞ்சம் கொடுத்த முக்கிய நபரான Christian Michel என்பவர் இந்திய அரசால் 2018-ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டு தற்சமயம் இந்தியாவில் சிறையில் உள்ளார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில், Chief Justice Dhananjaya Y. Chandrachud மற்றும் Justice. Narsimha, Justice. J.B.Pardiwala ஆகியோர்களின் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. Christian Michel தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் தண்டனை காலத்தில் 50% ஏற்கனவே சிறையில் இருந்துவிட்டார். அதனால் அவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென்று வாதாடினார். ஆனால் வழக்கு விசாரணை முடியும் வரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *