குற்றவாளியின் அனுமதி இன்றி கன்னித்தன்மை சோதனை செய்வது தவறு என டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்

குற்றவாளியின் அனுமதி இன்றி கன்னித்தன்மை சோதனை செய்வது தவறு என டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
மார்ச்-27, 1992 கேரளா, கோட்டயம் என்ற இடத்தில் உள்ள St.Pius X Convent –ல் Abhaya என்ற கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இருப்பினும் காவலர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர் Jomon Puthenpurackal என்பவர் Sister Abhaya Case Action Council என்ற அமைப்பை தொடங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். அவர் நடத்திய போராட்டத்தின் பலனாக அந்த வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த சி‌பி‌ஐ, கன்னியாஸ்திரி தொண்டாற்றிய திருத்தலத்தில் Father Kottoor மற்றும் Sister Sephy ஆகிய இருவருக்கும் இடையே இருந்த கள்ள உறவை மறைக்கவே கன்னியாஸ்திரி Abhaya கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. இதனால் Father Kottoor மற்றும் Sister Sephy ஆகிய இருவரும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. சி‌பி‌ஐ விசாரணை நடத்திய காலத்தில் Father Kottoor மற்றும் Sister Sephy ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் உறவை உறுதி செய்ய Sister Sephy-க்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த Justice Swarana Kanta Sharma, Sister Sephy அவர்களுக்கு அவரது உரிமையின்றி கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது மனித உரிமை மீறல் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் நீங்கள் குற்றமற்றவர் என நீருபித்த பிறகு, உங்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறளை எதிர்த்து நியாயம் பெற்றுக் கொள்ள அறிவுரை வழங்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *