தேசிய தலைநகரில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் சீன மாஞ்சாவை வைத்து (காத்தாடி பறக்கும் நூல்கள்) தயாரிப்பு, விற்பனை செய்தல் மற்றும் சேமிப்பது குறித்து விசாரிக்க தில்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நீதிபதி பிரதிபா எம் சிங் சீனா மாஞ்சாவை வாங்கும் இறக்குமதியாளர்கள், வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் குறித்து விசாரணை செய்து, நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
“நூல் விற்கப்படும் அனைத்து சந்தைகளின் விவரங்கள் வைத்து சீனா மாஞ்சாவை பற்றி கடைக்காரர்கள் எச்சரிக்கப்பட்டார்களா என்பது பற்றிய விவரங்கள் வழங்கப்பட வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட நிலையில் ஏதாவது கடைக்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதா இல்லையா மற்றும் சீன பாப்பாவை விற்பனையை தடுக்கும் அதிகாரிகள் மீது ஏதேனும் நடவடிக்கை எஎடுக்கப்பட்டுள்ளதா?,சீன மாஞ்சா விற்பனையைத் தடுக்கக்கூடிய அதிகரிகளும் கடமைப்பட்டவர்கள், அவர்களின் தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு வேண்டும்,” பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த நூல்களால் ஏற்படும் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சிங் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இவர்களில் பலர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது நூல் கழுத்தை அறுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சா பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், குழந்தைகள் மற்றும் இளம் வயதினரே காத்தாடிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆபத்தான நூல்கள் சந்தையில் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமையாகும்.
மாஞ்சா பற்றி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) தடை உத்தரவு இருந்தாலும், தேசிய தலைநகரில் மரணங்கள் இன்னும் ஏற்படுகின்றன என்று நீதிபதி சிங் குறிப்பிட்டார்.
எனவே, இந்த நூல்களைப் பயன்படுத்துவதற்காக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் நிலைப்பாடு மற்றும் வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை விவரமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மாவட்ட நீதிபதிகள் , துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், சந்தைகளில் இத்தகைய பொருட்கள் இல்லை என்பதை உறுதிசெய்ய அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ளவும், நுகர்வோருக்கு அவை இருக்கும் நூல்களின் சரியான தரம் குறித்து தெரியப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் கார்டுகளை பொருத்துவதற்கான ஆலோசனையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு டெல்லி காவல்துறையை பெஞ்ச் கேட்டுக் கொண்டது.
இந்த வழக்கு இப்போது ஏப்ரல் 12 ஆம் தேதி பரிசீலிக்கப்படும்.