மக்கள் நலனே முக்கியம் உச்ச நீதிமன்றம்

GODREJ & BOYCE MANUFACTURING CO LTD நிறுவனத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள Vikhroli என்ற பகுதியில் 9.69 acre நிலம் உள்ளது, அந்த நிலத்தை MUMBAI TO AHMEDABAD BULLET TRAIN திட்டத்திற்காக மகாராஷ்டிரா அரசாங்கம் அந்த நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்து அந்த நிறுவனத்திற்கு 264 கோடிகள் கொடுக்க முடிவு செய்தனர், ஆனால் அதை எதிர்த்து அந்த நிறுவனம் Writ petition ஒன்று தாக்கல் செய்தனர்

WRIT PETITION

ரிட் என்பது எழுத்து மூலமாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் எழுத்தாணை (நீதிப்பேராணை- என்றும் கூறலாம்) ஆகும்.

உங்களின் அடிப்படை உரிமைகளில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டாலும் கூட, உயர் நீதிமன்றம் (நிபந்தனை 226) அல்லது உச்ச நீதிமன்றத்தில் (நிபந்தனை 32) ரிட் மனு தாக்கல் செய்யலாம். ரிட் மனுவை பொறுத்த வரையில் உயர் நீதிமன்றத்தின் (நிபந்தனை 226) அதிகாரம் படர்ந்தும் மற்றும் அதன் அரசியலமைப்பு விரிவடைந்தும் உள்ளது.

அந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த பொழுது

GODREJ & BOYCE MANUFACTURING CO LTD தங்களுக்கு இழப்பீடாக 572 கோடிகள் வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர், ஆனால் மும்பை உயர் நீதிமன்றமோ மகாராஷ்டிரா அரசு அந்த நிலத்தை பொதுமக்களின் நல்லனுக்காக பயன்படுத்த போவதால் அரசு சொல்லும் 264 கோடிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது ,அதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்தனர் ஆனால் அதை விசாரித்த தலைமை நீதிபதி CHANDRACHAUD மற்றும் JUSTICES PS NARASHIMHA ,JB PARDIWALA அடங்கிய அமர்வு தேசிய நலனுக்காக எடுக்கப்படும் இடம் என்பதால் மும்பை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *