உத்திரபிரதேசத்தில் கூட்டுப் பலாத்கரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு விடுதலை ஒருவருக்கு தண்டனை

உத்திரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸஸ் என்ற நகரில்19 வயது தலித் சிறுமியை செய்து கொலை செய்த வழக்கில் 3 பேரை விடுதலை செய்தும், ஒருவரை குற்றவாளி என்றும் உத்தரப்பிரதேச சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட ராமு, லவ்குஷ் மற்றும் ரவி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர், குற்றம் சாட்டப்பட்ட சந்தீபீக்கு 304 IPC கொலைக்கு குற்றமாகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கு தண்டனை மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காகவும் தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (IPC Section 304 in Tamil) 

விளக்கம்

கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக் காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்து இல்லாமல் அல்லது மரணத்தை விளைவிக்கத் தக்க உடல் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின்றி அவன் செய்த காரியத்தால் மரணம் விளைந்திருந்தால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் 

பாதிக்கப்பட்ட பெண் செப்டம்பர் 14, 2020 அன்று ஹத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அவளைக் கொல்ல முயன்றார். அதன்பிறகு, செப்டம்பர் 29 அன்று, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் அவரது சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, உ.பி காவல்துறையும் நிர்வாகமும் அவரது உடலை குடும்பத்தினரின் சம்மதமோ அல்லது அவர்களின் முன்னிலையோ இல்லாமல், இரவில் வலுக்கட்டாயமாக தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கட்டாய தகனம் மற்றும் கூட்டு பலாத்காரம் தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்றம் அக்டோபர் 1, 2020 அன்று தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

29.09.2020 அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடல் தகனம் செய்யப்படும் வரை நடந்த சம்பவங்கள், எங்கள் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன, எனவே, நாங்கள் அதை தானாக முன்வந்து(SUO MOTO) விசாரணை செய்கிறோம்,” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

.

அக்டோபர் 10 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக 2020 டிசம்பரில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அந்த வழக்கில் குற்றம் மூன்று பேருக்கு விடுதலை அளித்து ஒருவருக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *