இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

இழப்பீடு வழங்காமல் NHAI அதிகாரிகள் நடத்திய நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணை நடத்துமாறு லக்னோவின் முதன்மைச் செயலாளர் (வருவாய்), உ.பி.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், 1956 க்கு எதிராக நடந்த நிலம் கையகப்படுத்தல் செயல் மேலும் இது நில உரிமையாளர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கு சமம் என்று நீதிமன்றம் கூறியது.

எனவே, இந்த விவகாரத்தில் NHAI அதிகாரிகள், குறிப்பாக திட்ட இயக்குநர், திட்ட அமலாக்கப் பிரிவு, கான்பூர், NHAI மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், குறிப்பாக இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“விசாரணை அறிக்கை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அமைச்சரிடம் தெரிவித்து அதன்படி கையகப்படுத்த நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல் இருந்த அதிகாரிகளின் மீது சிவில் மற்றும் கிரிமினல் தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை அறிக்கை மற்றும் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்த விசாரணை தேதி அதாவது ஏப்ரல் 3 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

இரண்டு வழி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிலம் NHAI ஆல் கையகப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கைகள் 2015-2016 இல் தொடங்கியது.

மனுதாரர்கள் தங்களது புகார் மனுவில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் NHAI தனது கட்டுமானத்தை முடித்த போதிலும், மனுதாரர்களுக்கு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை அல்லது வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்

அதற்கு அரசு பதில் கூறும் பொழுது முப்பத்தேழு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒன்பது கிராமங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

எனவே, ஒன்பது கிராமங்களில் உள்ள நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்யும் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அதில் அரசுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டிருந்தால் அதை கண்டறிந்து அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளிடமிருந்து அந்த நஷ்டத்திற்கான தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மனோஜ் குமார் சிங் மற்றும் தேவேஷ் குமார் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *