கஞ்சா வழக்கில் மும்பை நீதிமன்றம் அதிரடி
Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 கீழ் கஞ்சா விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளின் எடையை உள்ளடக்காது: மும்பை உயர்நீதிமன்றம்
NDPS சட்டத்தின்பிரிவு 2(iii)(b) இன்படி, கஞ்சா என்பது கஞ்சா செடியின் விதைகள் மற்றும் இலைகளைத் தவிர்த்து பூக்கும் அல்லது காய்க்கும் கதிர்களை குறிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.
NDPS – போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் கஞ்சாவின் எடையைக் கண்டறியும் போது, விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளின் எடையை விலக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியது [இப்ராஹிம் குவாஜா மியா. சையத் @ ராஜு எதிராக மகாராஷ்டிரா மாநிலம்]
NDPS சட்டத்தின் பிரிவு 2(iii) (b) இன் படி, கஞ்சா என்பது கஞ்சா செடியின் பூக்கள் அல்லது அதன் கதிர்கள் மட்டும் குறிக்கிறது என்று தனி நீதிபதி அனுஜா பிரபுதேசாய் கூறினார். என்.டி.பி.எஸ் சட்டத்தின்படி, 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை, குற்றம் சாற்றப்பட்டவர் வைத்திருந்ததாக, அது வணிக ரீதியில் இருந்தது என்பது அரசுத் தரப்பு வழக்கு.
எனவே, போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு, இலைகள், விதைகளின் எடையை உள்ளடக்கியிருக்கலாம் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
எனவே, என்டிபிஎஸ் சட்டத்தின் 20(சி) பிரிவின் கீழ் கஞ்சா கைப்பற்றப்பட்ட அளவு வணிக அளவில் (Commercial Quantity) இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
“பூவிற்கும் அல்லது கதிர்களுக்கும் (Flowering Tops) எடையை மட்டும் கணக்கிடாமல், முழுப் பொருளையும் ஒன்றாக எடைபோடுவது, குற்றம் சாற்றப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ‘கஞ்சா’ என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 20(சி)-ன் கீழ் உள்ள விதிமுறைகளை ஈர்க்கும் வகையில் வணிக அளவில் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று நீதிமன்றம் கூறியது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை ₹50,000 ரூபாய்க்கு மதிப்பான உத்திரவாத பத்திரம் (Surety Bond) வழங்குவதன் மூலம் ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சனா ரயீஸ் கான், அனிகேத் பர்தேஷி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் ஆர்.எம்.பேத்தே ஆஜரானார்.