நடிகர் விஷால் கடனை அடைக்கும் வரை அவர் நடிக்கும் திரைப்படங்களை திரையிட தடை
நடிகர் விஷால் இருந்து ரூ.21.29 கோடியை வசூலிக்கக் கோரி லைகா புரொடக்ஷன்ஸ் தொடர்ந்த வழக்கில் ரூ.15 கோடிக்கு வட்டியுடன் திருப்பி தாராத வரை எந்தப் படத்தையும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.
ஏற்கனவே உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி மார்ச் 2022 இல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டை, தற்காலிக தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் பாரத சக்ரவர்த்தி கொண்ட பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
வழக்கின் படி, 2019 ஆம் ஆண்டில், விஷால் மதுரை அன்பிடமிருந்து ரூ.21.29 கோடி கடன் வாங்கினார். லைகா நிறுவனம் அந்தக் கடனை விஷால் சார்பாக அடைப்பதற்கு ஒப்புக்கொண்டது, அதற்குப் பதிலாக, விஷால் அசல் தொகையை 30 சதவீத வட்டியுடன் லைக்கா நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், அந்தத் தொகையை விஷால் திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறி லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லைகா நிறுவனம் விஷாலின் கடனை அடைக்கவில்லை என வாதாடினார். ஆனால் லைகா நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கடனை அடைக்க மேற்கொண்ட வங்கி பரிவத்தணைகளை ஆதாரத்துடன் நிரூபித்தார். வழக்கின் தன்மையை அறிந்த நீதிபதி வழக்கில் ரூ.15 கோடிக்கு வட்டியுடன் திருப்பி தாராத வரை எந்தப் படத்தையும் வெளியிடக் கூடாது என தடை விதித்தார். இதை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தது.
விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் பாரத சக்ரவர்த்தி கொண்ட பெஞ்ச் தள்ளுபடி செய்தது. மேலும் கடனை கட்டத் தவறினால், திரையரங்குகள் அல்லது OTT இயங்குதளங்களில் விஷாலின் திரைபடங்கள் திரையிடக்கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.