அமலாக்க துறையின் அலட்சியம்

நாட்டில் அமலாக்கத்துறையின் வாயிலாக எத்தனையோ ரெய்டுகள் நடந்து வருகிறது. அதில் பல கோடிகள் பணமாகவோ, பொருளாகவோ கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் என பல்வேறு தரப்பினர் சிக்குகின்றனர். 2011 முதல் 2019 வரை 1700 ரெய்டுகள் நடந்துள்ளது. இதில் 1569 ரெய்டுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் இதுவரை 9 வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி என்பவர் “LIVE LAW” என்கிற பத்திரிக்கையில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இந்த ரெய்டு சம்மந்தப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் என்னவாயிற்று? என நாட்டுமக்களுக்கு இது கேள்விக்குறியாகவே உள்ளது
மேலும் அவர் கூறுகையில் இந்த சட்டத்தால் ரெய்டுகளால் பாதிக்கப்பட்ட தனது கட்சிக்கார ஒரு பெண்மணி ஒரு நிறுவனத்தின் CEO ஆக இருக்கிறார். PMLA (Prevention of Money Laundering Act) என்கிற சட்டத்தின்படி அவரை கைது செய்து அவர் வசித்து வரும் வீட்டையும் வழக்கில் சேர்த்து உள்ளனர். பல மாதங்கள் விசாரணைக்குப் பின்னர் இதுகுறித்து தனது கைது நடவடிக்கை நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் (Appellate Tribunal) இந்த அமலாக்கத்துறையின் வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்.
இந்த வழக்கை விசாரிக்கும் பொழுது அமலாக்கத்துறை அவரது ECIR (ENFORCEMENT CASE INFORMATION REPORT) விசாரணை அறிக்கையை மட்டும் தருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மேல்முறையீடு சென்ற பின்னர் எந்த தீர்வும் தராமல் வெறும் அறிக்கையை மட்டும் தருகிறார்கள். அவரது கட்சிக்காரரின் நல்ல செயல்களுக்காக ஜனாதிபதி கையினால் விருது வாங்கி உள்ளார். அப்படிபட்ட பெண்மணியை அமலாக்கதுறை நடத்தும் விதம் இவ்வாறு இருக்கிறது. அந்த வழக்கின் மதிப்பீடு 65 லட்சம் மட்டும் ஆனால் இவர்களோ 10 கோடி மதிப்புள்ள வீட்டை வழக்கில் சேர்த்து உள்ளனர். மேலும் 2019 வரை மேல்முறையீடு தீர்ப்பாயக் குழுவில் 5 பேர் கொண்ட விசாரணை நீதிபதி குழுவில் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கிறார். அந்த மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் தலைவரோ மற்ற பணி செய்பவர் எவரேனும் கிடையாது. தற்போது பணியில் அமர்ந்திருக்கும் நபர்களே ஓய்வு பெரும் நிலையில் உள்ளனர். ஆக தீர்ப்பாயமே மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறது என் கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *