பூர்வ குடிமக்களின் அமோக வெற்றி – அமேசானுக்கு எதிராக
ஒரு இடத்தை பூர்வீகமாக கொண்டு வாழும் மக்களுக்கு அந்த இடம் ஏதாவது ஒரு நன்மை கொடுத்துக் கொண்டே இருக்கும். அவர்கள் அந்த இடத்தில் தங்களது வாழ்க்கை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், வாழ்க்கையின் தேவைக்காக அந்த இடத்திற்கு வரும் மக்கள் அங்கிருக்கும் பூர்வகுடி மக்களை அங்கிருந்து விரட்டி அந்த நிலத்தை ஆள்பவர்கள் ஆக மாறியுள்ளனர். சென்னை சத்தியவாணி முத்துநகர் தீவுத்திடல் பின்புறம் அமைந்துள்ளது.
“சீர்மிகு கூவும்” என்ற திட்டத்தில் கூவம் கரையோரம் வாழும் மக்களை 2019-ல் வெளியேற்றி பெரும்பாக்கத்தில் தங்க வைத்தனர். இது அவர்கள் தொழில் செய்யும் இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் தள்ளி உள்ளது இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதேபோல் தென்னாபிரிக்காவின் தலைநகரம் கேப்டவுனில் அமேசான் என்ற மிகப்பெரிய நிறுவனம் தனது ஆப்ரிக்காவின் தலைமையகத்தில் (Head Quarters) Shopping Centre Apartment கட்டுவதற்காக அனுமதி பெற்றார்கள். ஆனால் அங்கு வாழும் பூர்வகுடிமக்களான GORINGHAIQUA என்பவர்கள் அந்த இடத்தை புனித இடமாக கருதி வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் 1510–ல் போர்ச்சுகீசியர்கள் அங்கு வாழும் பூர்வ குடிமக்களான GORINGHAIQUA போர் நடத்தினர். போர்ச்சுகீசியர்கள் அந்த நகரை கைப்பற்ற முயற்சி செய்தார்கள். ஆனால் பூர்வ குடிமக்கள் கடுமையாக போர் செய்து போர்ச்சுகீசியர்கள் விரட்டி விட்டார்கள். இது தென்னாப்பிக்கா உருவாவதற்கு முன் காலனி ஆதிக்கம் செலுத்த வந்த போர்ச்சுகீசியர்களுக்கும், GORINGHAIQUA-க்கும் நடந்த முதல் போர். இதில் GORINGHAIQUA வெற்றி பெற்றதால் அந்த இடத்தை இன்று வரை புனிதமாக கருதி வணங்கி வருகின்றனர். அதனால் அமேசான் கட்டும் மிகப்பெரிய கட்டுமான பணியை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அதை விசாரித்த நீதிபதி GOLIATH, இந்த கட்டிடம் கட்டுவதால் பூர்வ குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நசுக்கப்படுகிறது என்பதால் அமேசான் கட்டடத்தை நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்