இன்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள போகும் செய்தி என்னவென்றால் CSR என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியமாகும்

இன்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள போகும் செய்தி என்னவென்றால் CSR என்றால் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியமாகும்
CSR என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது company service record தான் ஆனால் அதற்கான அர்த்தம் அதுவல்ல. இது காவல் நிலையங்களில் பராமரிக்க படும் பதிவேடு ஆகும்.
முதலில் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் முதலில் காவல் நிலையத்தை தான் அனுகுவோம். அந்த காவல் நிலையத்தில் நமது பிரச்சனையை கூறியதும் பதிவு செய்வதே csr ஆகும். CSR என்பது community service register என்று ஆங்கிலத்தில் கூறுவர், தமிழில் இதற்கு சமுதாய சேவை பதிவேடு எனப்படும். இது இந்தியாவில் உள்ள அனைத்து காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் தினசரி பதிவேடு அறிக்கை ஆகும். இது அடையாளம் கான முடியாத குற்றத்திற்காக பராமரிக்கப்படும் ஒரு பதிவேடு ஆகும். அதாவது ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்பொழுது காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரி அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேவையற்ற வழக்காக இருப்பதாக நினைத்து. அந்த புகார் அளித்த முனுதாரர் மற்றும் எதிர் மனுதாரரை அழைத்து பேசி சமாதானப்படுத்தி அனுப்புவார். இப்படிபட்ட புகார்களுக்கு சாட்சியாக கூறப்படும் ரசீது அல்லது பதிவேடு தான் CSR எனப்படும். உதாரணமாக குழாயடி சண்டைகள், பக்கத்து வீட்டுக்காரருடன் வாகனம் நிறுத்துவதில் தகராறு மற்றும் பக்கத்து வீட்டு காராருடன் நில தகராறு போன்றவை இந்த CSR ல் பதிவு செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *