ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை! கொடுக்காததால் கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக அரசின் தலையில் கொட்டியது!
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றம் ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களது கல்வியில் எந்த வித தடைகளும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக ஏழை மானவர்களுக்கு 2 செட் சீருடை இலவசமாக வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு 1 செட் சீருடையை மட்டுமே வழங்கியது. இதற்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் மிகவும் கண்டனம் தெரிவித்ததோடு பல கோடி ரூபாய் பல விசயங்களுக்கு அரசு செலவிடுகின்றது அதுமட்டுமின்றி தேவையற்ற பல செலவுகள் செய்கிறது, ஆனால் மாணவர்களின் கல்வி என்பது அடிப்படை உரிமை, இதனை செயல்படுத்துவதற்கு அரசு கணக்கு பார்க்க கூடாது . இது கர்நாடக அரசுக்கு மிகவும் இழுக்கு என்று கருத்து தெரிவித்தது