கற்பழிப்பு அல்ல!!! 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!!!

கற்பழிப்பு அல்ல!!! 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!!!
ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண் தன் கணவருடன் வசித்து வருகிறார். இந்த குடும்பத்திற்கு எதிர் வீட்டில் ஒரு ஆண் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த பெண்ணுக்கும் எதிர் வீட்டில் குடியேறிய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக உருவாகிறது. அந்த கள்ளக்காதலால் இருவரும் தங்களுக்கு இடையே பலமுறை உடலுறவு வைத்துக் கொள்கின்றனர். இதனால் அந்த பெண் கற்பம் தரித்து 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையே ஒரு குழந்தை பிறக்கிறது. 2012-ஆம் ஆண்டில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் பிறந்த குழந்தையுடன் அந்த நபரின் சொந்த ஊருக்கு சென்று பார்க்கிறார். அங்கு அந்த நபருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இருப்பினும் அந்த நபருடனான கள்ளத்தொடர்பு தொடர்ந்த வண்ணமே இருந்ததது. இதனிடையே அவரது முதல் கணவர் அந்த பெண்ணுடன் 2014-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று தன் மூன்று பிள்ளைகளுடன் தனியே வாழ ஆரம்பிக்கிறார். இதனால் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்தவர் மீது 2015-ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வழக்கை ஆராய்ந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை பராமரிகாப்பிற்காக ரூ.5,00,000/- தொகையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்து தீர்ப்பளிக்கிறார்.
இந்த தண்டனை எதிர்த்து அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அந்த வழக்கை (Naim Ahmed vs State) விசாரித்த நீதிபதி BELA M. TRIVEDI, J அவர்கள் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மனம் ஒற்று போகும் போது வைத்துக் கொள்ளும் உடலுறவு கற்பழிப்பு ஆகாது எனவும், இது தவறு என்று தெரிந்தே செய்த அந்த பெண் மீதும் தவறு உள்ளது எனவும் கூறி, அந்த நபர் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி அமைத்து அந்த பிள்ளைக்கு பராமரிப்பிற்காக ரூ.5,00,000/-த்தை மட்டும் செலுத்த கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பை அளித்தார். இதனால் கருத்து ஒற்றுமையில் ஒன்றாக இருந்து உறவு வைத்துக் கொண்டு பின் கருத்து வேறுபட்டால் இருவரும் பிரிந்தால் அது கற்பழிப்பு ஆகாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *