கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்பாயம் 100 கோடி அபராதம் விதித்தது:

கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்பாயம் 100 கோடி அபராதம் விதித்தது:

கொச்சி மாநகராட்சிக்கு சொந்தமான பிரமபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக குப்பை கிடங்கு சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறும் புகை கரிமுகள், பிரமபுரம் பகுதி முழுவதும் பரவியது, இதனையடுத்து மீட்புபணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சமபவ இடத்திற்கு சென்றனர். சுமார் 4:30 மணியளவில் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருக்காகரை, ஏலூர், திருப்புனீத்துரா, காந்திநகர், அலுவா பகுதிகளில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயை அணைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று கூறினர். ஏனென்றால் கழிவு மேடுகளில் தீ பரவியதால் புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் குப்பை கழிவுகள்/குவியல்கள் வழியாக முன்னேற சிரமபடுகின்றனர் என்று எர்ணாகுளம் மண்டல தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமின்றி 10 மண் தொண்டி இயந்திரங்கள் மூலம் மறுநாள் பணியில் அமர்த்தபட்டு கழிவு குவியல்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து முற்றத்தில் மீண்டும் மீண்டும் தீ விபத்துகள் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் உள்ளூர் வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் இரண்டு பெரிய தீவிபத்துகள் ஏற்பட்டன. இதற்கான காரணங்கள் கண்டறியபடவில்லை.

இச்சமபவம் குறித்து தேசிய பசுமை தீர்பாயம் தானாக முன்வந்து (suomotto) வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்ததில் தேசிய பசுமை தீர்பாயம் கொச்சி மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *