கோடியில் ஒருவர் – நீதிபதி சந்துரு
நீதிபதி கிருஷ்ணசுவாமி சந்துரு, இவர் ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியாவார்.
இவர் 8 மே 1951ல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர்.
இவர் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாணவர் (ஆர்வலர்) ஆவார். மாணவர் போராட்டங்களை முன்னின்று நடத்தியதற்காக சென்னை லயோலா காலேஜில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் தனது இளங்கலை பட்டத்தை முடிப்பதற்காக தனது மூன்றாம் ஆண்டில் மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்தார். 1973-ல் பட்டம் பெற்ற பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தியதன் காரணமாக கல்லூரி விடுதியில் சீட் கிடைக்கவில்லை. பின்பு அவருக்கு சீட் வழங்கப்பட்டது. தனது சட்டக் கல்லூரி படிப்பை முடித்த பிறகு 1988ஆம் ஆண்டு வரை முழுநேர கட்சிப் பணிகளை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி சமூக சேவைகள் பலவற்றை செய்தார். அதன்பிறகு சந்துரு ரே மற்றும் ரெட்டி என்ற சட்ட நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்பு ஜுலை 31 2006-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். பின்பு, நவம்பர் 9 2009ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நீதிபதியாக இருந்த கால கட்டத்தில் சிறந்த நீதித்துறை வல்லுநராக திகழ்ந்து விளங்கினார்.
இவரது தீர்ப்புகள் பலரின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தது. இவரது தீர்ப்புகள் நீதித்துறைகள் இதுவரை யாரும் கண்டிராத ஒன்றாக அமைந்தது. இவரின் தீர்ப்பு பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தது. முக்கியமாக கீழ் தரப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. நீதி வேண்டி முறையிடுவோர் கண்கலங்கி இவர் முன் நின்றால் அது நியாயமான வாதமாக இருந்தால் இவரின் தீர்ப்புகள் நியாயமானதாகவே இருக்கும், அவர்களுக்கு சாதகமாகவும் இருக்கும். நீதிமன்றம் நாட இயலா மக்களுக்கும் தன் தனிமுயற்சியால் நீதி வாங்கி தந்துள்ளார் நீதிபதி கே.சந்துரு.
இவர் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் ஏறக்குறைய 96000 வழக்குகளை முடித்து வைத்துள்ளார். இவரின் கொள்கைகள் யாவும் சாதி மற்றும் மதவெறிக்கு புறம்பானது. இவர் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக மிகவும் பாடுபட்டுள்ளார், மனித உரிமை மீறல்களை மிகவும் கண்டிக்கிறார்.
முக்கிய தீர்ப்புகள்..
இவரின் புகழ்பெற்ற வழக்கானது 1993இல் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு அடிப்படையில் நடைபெற்ற ராஜாகண்ணு, வழக்கு ஆகும், சென்னை ஆட்கொணர்வு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்டநாள் வழக்கு இதுவேயாகும். இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு அடிப்படை வழக்கு ஆகும்.
இந்த வழக்கை 2022 எடுக்கப்பட்ட ஜெய்பீம் என்ற திரைபடத்தின் வாயிலாக நாமறிவோம்.
அவர் அளித்த தீர்ப்புகளில், எல்லாமே மன திருப்தி அளித்தது. குறிப்பாக அங்கன்வாடி, சத்துணவு சமையல்காரர்கள் பணியிடத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். இதை அரசும் ஏற்றுக்கொண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது. இதனால் தலித்துக்கள் சமைக்கும் சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடும்போது, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மறைந்துள்ளது.
அதேபோல தேனி மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பெண் பூஜை செய்வதை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்து, இந்து மதத்தில் பெண் தெய்வம் இருக்கும்போது, அந்த தெய்வத்துக்கு பெண் பூஜை செய்வதில் தவறில்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பொது சுடுகாடு சம்பந்தமாக பிறப்பித்த தீர்ப்பில், சமரசம் உலாவும் இடமே என்ற பாடலை மேற்கோள் காட்டியிருந்தார்.
• கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு வழிபாட்டு உரிமை உண்டு.
• மாட்டிறைச்சிக் கடைகள் நடத்த தடை இருந்ததை நீக்கிய தீர்ப்பு.
• சிறுமிகள் மீது இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைக் களைய அரசுக்கு உத்தரவு இட்ட தீர்ப்பு
• சாதி மறுப்புத் திருமணம் மதக்கலப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு ஏற்படும் தடைகளுக்கு எதிரான தீர்ப்பு.
• பஞ்சமி நிலங்களை ஆதிக்க சக்திகளிலிருந்து மீட்டுத் தாழ்த்தப்பட்ட உழவர்களுக்கு மீண்டும் வழங்க ஆணை இட்ட தீர்ப்பு. என சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
சொத்துப் பட்டியல் வெளியீடு
பிரிவு உபசார விழாவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும். அந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை புகழ்ந்து பேசுவார்கள் அதில் உண்மை இருக்காது அதனால் பிரிவு உபசார விழா வேண்டாம் என்று அதை நிராகரித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கே.சந்துரு ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன், ஒரு மூத்த வழக்கறிஞரால் எந்த அளவுக்கு சமுதாயப்பணி செய்ய முடியுமோ அதை செய்வேன் என்றார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை ஒப்படைத்தார். அப்போது, நீங்கள் என்னுடைய காரில் வரலாம். உங்கள் வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் கூறினார். அதற்கு, தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு செல்வதாகவும், இதற்காக சீசன் டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன் என்றும் சந்துரு கூறினார். பின்னர் தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றார். இவர் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை, அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்,
ஒரு மேயாத மான்,
நானும் நீதிபதி ஆனேன்.