மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ஶ்ரீ ஹரி விக்னேஷ் என்பவர் 19 மருத்துவர்கள் சார்பாக பொது மருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குணரகத்தை எதிர்த்து வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
வழக்கின் விளக்கம்:
அந்த வழக்கு என்னவென்றால் முதுகலை(MD) பட்டம் பெற்ற மருத்துவர்களை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் நியமிப்பதால் அவர்களின் படிப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் அங்கு அளிக்க படும் முதலுதவிகளை சாதாரண மருத்துவரால் கூட வழங்க முடியும் என்றும் இவர்களை அங்கு நியமிப்பதால் பொதுமருத்துவமனைகளில் ஒரு சிறந்த சிகிச்சை அளிக்க பெறுவதில்லை என்றும் குற்றம் சாற்றி உள்ளனர். இதனால் இவர்களின் திறமை மறைக்கபடுவதாக கூறுகின்றனர். இதனை தொடர்ந்து இதுபோன்ற மருத்துவர்களை பெரிய மருத்துவமனையில் பணி நியமனம் செய்தால் ஒரு சிறந்த சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்பது இவர்களின் வாதமாகும். இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, இதுகுறித்து அவர் கூறுகையில் மருத்துவம் என்பது கடவுளுக்கு நிகரான தொழில் இது மக்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தலாம் அதில் நேரத்தை செலவிடவும் என்றும் இதுபோன்று நீதிமன்றங்களில் நேரத்தை செலவிடுங்கள் தவிர்க்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அரசின் தனிமுடிவிற்குள் நீதிமன்றத் தலையிடாது என்று கூறியுள்ளார்.