போலி விளம்பரங்கள் – நில்! கவனி!! செல்!!! கவனம் தேவை
உலகில் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் தவறான விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். சிகரெட் விற்பதற்காக 1940 முதல் 1960 வரை புகைப்பிடிப்பதால் நுரையீரலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர் என்று விளம்பரம் செய்தனர். 1960 முதல் 1990 வரையில் பிரபல நடிகர்களை வைத்து விளம்பரம் செய்தவர்கள், இது போன்ற தவறான விளம்பரத்தை நம்பி மக்கள் புகை பிடிப்பதற்கு அடிமையாகி நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டு பலபேர் உயிரிழந்தனர். இப்பொழுது GSK (GlaxoSmithKline) நிறுவனத்தின் Tooth Paste Sensodyne தனது விளம்பரங்களில் “உலகில் உள்ள பல் மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கிறார்கள்”. “மருத்துவ ரீதியாக 60 நொடிகளில் இது வேலை செய்கிறது” போன்ற விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று கருதி CENTRAL CONSUMER PROTECTION AUTHORITY (CCPA) தானாக முன்வந்து இந்த விளம்பரங்களில் உண்மைத்தன்மை அறிய வழக்கை பதிவு செய்தது. இது தொடர்பாக DRUG CONTROLLER GENERAL OF INDIA, DRUG CONTROL ORGANIZATION போன்ற அரசு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியது. இதை விசாரித்த பின் அந்த நிறுவனம் விளம்பரத்தில் கூறிய தகவல்கள் அனைத்தும் தவறு என்று கண்டுபிடித்து இந்த நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மேலும் 2019 STATE FOOD AND DRUG ADMINISTRATION (FDA) அதே நிறுவனம் அந்த டூத் பேஸ்ட் விற்பதற்காக COSMETIC LICENSE தான் பெற்றுள்ளது MEDICAL LICENSE பெறவில்லை என்று 4 கோடி மதிப்புள்ள டூத் பேஸ்ட் கைப்பற்றியது. போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம்.