மோதலில் முடிந்த தேர்தல்

4696 உறுப்பினர்களை கொண்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அசோசியேஷனுக்குக்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஆனால் 2016 பிறகு தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. காரணம் வழக்கறிஞர்கள் தேர்தலில் கொண்டு வந்த புதிய விதிமுறைகள். அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து பின்னர் நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம் என அறிவித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு என பல்வேறு காரணங்களால் 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16.12.2022 அன்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்தல் நாளான 09.01.2023 இன்று வழக்கறிஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலின் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *