தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சுதிர்குமார் ரெட்டி. திருமணமான இவர் சொந்தமாக Tours and Travels தொழில் நடத்தி வருகிறார்.
சுதிர் குமார் ரெட்டி 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக சொந்த காரில் பயணம் மேற்கொண்டார். அந்த வாகனம் அவரது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் மேற்கொண்ட பொது காரில் கஞ்சா கடத்துவதாக மகாராஷ்ட்ரா மாநில காவல்துறையினர் சுதிர் குமார் ரெட்டியை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு ஜாமீனில் வர மனு கொடுத்தார்.
மேலும் மகாராஷ்டிரா மாநில காவல்துறையினரும், நீதிமன்றமும் முழுக்க முழுக்க ஹிந்தியிலே உரையாடுவது தனக்கு ஒன்றும் புரியவில்லை என சுதிர் குமார் ரெட்டி தனது நிலைமையை விளக்கி உள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியோ ஹிந்தி மொழி என்பது இந்திய தேசிய மொழி என்று விளக்கம் கொடுத்து ஜாமீனை நிராகரித்து விட்டார். தற்போது சுதிர் குமார் ரெட்டி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்மனு முறையீடு செய்துள்ளார். பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டமும் பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை என்பது நிதர்சனம்.