2019 இல் பெங்களூரை சேர்ந்த JANARDHANA RAMAKRISHNA SHARMA தன் மகள்கள் LOPAMUDRA SHARMA மற்றும் NANDITA SHARMA இருவரையும் நித்தியானந்தா தனது அகமதாபாத் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக HABEAS CORPUS மனு ஒன்று குஜராத் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
HABEAS CORPUS
ஒருவரை வேண்டுமென்றோ அல்லது தவறாக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, சுதந்திரமற்று இருக்கும்போது, ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நபரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது காவல் துறையின் கடமையாகும். அந்த சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் விடுவிக்கப்படலாம். தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, அவர்களின் தனி மனித உரிமைகளை காக்க இயலும்.
இந்த வழக்கு நீதியரசர் NV ANJARI மற்றும் நீதியரசர் Nirmal mehta என்ற அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அந்த பெண்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் BB NAIK அந்த இரு பெண்களு்ம் VIDEO CONFERENCE மூலமாக ஆஜராக தயாராக உள்ளார்கள் என்று தெரிவித்தார், இதை அடுத்து அந்த வழக்குFEB 27 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.