பெண்களின் திருமண சுதந்திரம்
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்ரசன்னா ( ரிஷிகேஷ் சாகூ v கர்நாடகா) என்ற வழக்கில் தற்பொழுது பெண்கள் மேலும் ஒரு சுதந்திரமான இல்லற வாழ்க்கையை துன்புறுத்தலின்றி வாழ்வதற்கு தீர்ப்பின் மூலம் வழிகாட்டியுள்ளது. திருமணமான மனைவியை ஒப்புதலின்றியோ அல்லது கட்டாயபடுத்தியோ உடலுறவு வைத்த்துக்கொண்டால் I.P.C 375 சட்டபிரிவின் படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடபட்டுள்ளது. மேலும் “குற்றம் என்பது குற்றமே” என்று அவருடைய தீற்புரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்சொன்ன தீர்பானது இந்தியாளவில் பல்வேறு விவாதங்களை தொடங்கியுள்ளது.