ரியல் எஸ்டேட் முறைகேடு!!! பில்டரின் தலையில் கொட்டிய நீதிமன்றம்!!!
M/s.Ramaniyam Real Estate Ltd என்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட Abbotsbury, No.74/42, C.P.Ramasamy Road, Alwarpet, Chennai -18 அபார்ட்மெண்ட் உள்ளது. அந்த அபார்ட்மெண்டில் பிளாக் 1 மற்றும் பிளாக் 2 என்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு விற்கப்பட்டது. அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் பொது இடத்தை (Common Area), அதாவது அபார்ட்மெண்டில் இருக்கும் பொது பொருட்களை சேகரித்து வைக்கும் இடம் மற்றும் எலெக்ட்ரிக்சிட்டி பராமரிக்கும் இடம் (மொத்தம் 4800 சதுரடி, Ground Floor + First Floor) ஆகியவற்றை தனி நபர் ஒருவற்கு முறைகேடாக அந்த நிறுவனத்தினர் விற்றுள்ளனர். இதனை அறிந்த அந்த அபார்ட்மெண்ட் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து அந்த அபார்ட்மெண்ட் கட்டுவதற்கு அனுமதி அளித்த CMDA செயலாளர், முறைகேடாக அந்த இடத்தை விற்ற நிறுவனம் மற்றும் அந்த இடத்தை வாங்கிய நபர் ஆகியோர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் Justice R.சுப்ரமணியன் மற்றும் Justice குமரேஷ் பாபு ஆகியோர்கள் கொண்ட அமர்வு, அபார்ட்மெண்டில் இருக்கும் பொது இடமானது (Common Area) Undivided Share என்ற அடிப்படையில் அந்த அபார்ட்மெண்டில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கே சொந்தமானது, அதை தனி நபருக்கு விற்கும் உரிமை அந்த அபார்ட்மெண்டை கட்டிய நிறுவனத்திற்கே கிடையாது என தெரிவித்தனர்.