கொச்சியில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த எம்.ஷியாஸ் என்பவர் சன்னி லியோன் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளார், சன்னி லியோன் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக பணம் வாங்கிவிட்டு விழாவில் பங்கேற்க தயாராக இல்லை என்றும், மேலும் வாங்கிய பணத்தை திரும்பி தர முடியாது என்று கூறியதாக புகார் கொடுத்துள்ளார் ஆனால் அந்த புகாருக்கு பதில் கூறும் பொழுது சன்னி லியோன் விழாவில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அல்லது பணத்தைத் திருப்பித் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார், ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தேதியை பலமுறை மாற்றியதால் தான் பணத்தை திரும்பி பெற முடிவு செய்த போது அவர்கள் அதை வாங்க மறுத்து தன் மீது பொய் புகார் ஒன்று கொடுத்துள்ளதாக கூறியுள்ளார், மேலும் தன் மேலாளர் ₹30 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேதிகள் கொடுத்ததை ஒப்புக்கொண்டார், ஆனால் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை பலமுறை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிப்ரவரி 2019 இல் கேரளாவில் ஒரு மாதம் விடுமுறையில் இருந்தபோது இந்த திட்டம் வந்ததாக கூறியுள்ளார், புகார்தாரர் கொடுத்த புகார் படி சன்னி லியோன் என்கிற கரஞ்சித் கவுரைத் தவிர அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் அவர்களின் மேலாளர் சுனில் ரஜனியின் பெயரும் எஃப்ஐஆரில் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் சன்னி லியோன் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவதாகவும் வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.( கரஞ்சித் கவுர் வோஹ்ரா & ஆர்ஸ். V கேரளா மாநிலம் & Anr.)