ஜி தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மூன்று ரிட் மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சினிமா தியேட்டர்கள் டிக்கெட்டுகளுக்கு உச்சவரம்பு அல்லது அதிகபட்ச வரம்பை நிர்ணயித்திருந்தாலும், பல திரையரங்குகள் டிக்கெட்டுகளுக்கு அதிக விலையைத் தொடர்கின்றன.
ரஜினிகாந்த் நடித்த கபாலி, சூர்யா நடித்த சிங்கம் 3 மற்றும் விஜய் நடித்த பைரவா ஆகிய மூன்று குறிப்பிட்ட படங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததற்காக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தேவராஜன் கோரினார்.
மனுதாரர், கடந்த காலங்களில் இதே போன்ற மனுக்களை தாக்கல் செய்ததாகவும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட இரண்டு தனித்தனி உத்தரவுகளின் மூலம், திடீர் சோதனைகளை நடத்தவும், தமிழ்நாடு சினாமாஸ் ஒழுங்குமுறை விதிகள் 1957 பின்பற்றபடுகிறதா என்று அரசு கண்காணிக்க வேண்டும்.
2017 ஆம் ஆண்டு தனது உத்தரவில், உயர் நீதிமன்றம் அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயிப்பதன் நோக்கம் பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் பொழுதுபோக்கு கிடைப்பதை உறுதி செய்வதாக இருப்பதால், இந்த உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அந்த சட்டத்தின் முலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் ஒவ்வொரு வகுப்பிற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச டீக்கெடீன் விலையை நிர்ணயிக்க திரையரங்கு உரிமம் வழங்கும் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்று மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மாநிலத்தில் உள்ள திரையரங்குகள் ஒரு டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக ₹120 வசூலிக்கலாம். இந்த உச்சவரம்பு வரம்பிற்கு விதிவிலக்கு IMAX திரையரங்குகள் மட்டுமே, ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் அதிகபட்சமாக ₹480 வசூலிக்கலாம் என்று அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமந்த், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளிலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை பின்பற்றாமல் இருக்கும் சினிமா தியேட்டர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் சினிமா கண்காணிப்புக் குழுவால் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும் அரசு கூறியது.
உயர்நீதிமன்றம் அரசின் வாதங்களை பதிவு செய்து, இந்த பிரச்சனையில் அதன் முந்தைய உத்தரவுகளை தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது.
தேவராஜன் நேரில் ஆஜராகவும், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.சிலம்பன்ணன், வக்கீல்கள் எஸ்.பாலமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.