வயது குறைவான மாணவியை திருமணம் செய்த ஆசிரியர்! கொடுமைக்கு சமம்¡குஜராத் உயர் நீதிமன்றம்

ஒரு ஆசிரியர் தனது வயதை விட குறைவான வயதுடைய மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவது, கொடுமைக்கு சமம் என்றும் அதன் பொருட்டு விவகாரத்து பெறலாம் என்று குஜராத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

எனவே, நீதிபதிகள் NV ANJARIA மற்றும் SANDEEP N BHAT ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 45 வயது பேராசிரியர் அவரை விட 12 வயது குறைந்த வயதில் உள்ள மாணவியை திருமணம் செய்தது கொடுமைக்கு சமம் என்று குறி திருமணத்தை கலைத்த குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

“கொடுமை என்பது வரையறுக்கப்பட்ட கருத்து அல்ல. வயது மற்றும் வாய்ப்பு ஆகியவற்றில் பெரிய இடைவெளியைக் கொண்ட ஒரு ஆசிரியரைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு மாணவி, மற்றும் திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு (மாணவி) நடந்த விஷயங்கள் அவள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிகிறது,” என்று ஜனவரி 25 அன்று தீர்ப்பளித்த பெஞ்ச் கூறியது.

கொடுமையின் அடிப்படையில் மனைவிக்கு விவாகரத்து வழங்கிய அம்ரேலி மாவட்டத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் உண்மைகளின்படி, மனைவி கணவனின் மாணவி, அவருக்கு கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்தார். அங்கு அவர் அந்த மாணவியிடம் தனது பாடத்தில் A கிரேடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார், அப்படி மதிப்பெண் பெறவில்லை என்றால் தன்னுடைய விருப்பப்படி அவள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, பேராசிரியை அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொலைபேசியில் தொல்லை கொடுத்துள்ளார். அவள் தனக்குத் திருமணம் செய்து கொண்டால், முந்தைய திருமணத்தினால் உள்ள இரண்டு குழந்தைகளும் தாயின் அன்பைப் பெறுவார்கள் என்று உருக்கமாக பேசி அந்த மாணவியின் மனதை கலைத்தார்.

அவரை திருமணம் செய்த பிறகு, அவரது முதல் மனைவி இறக்கவில்லை என்பதை அந்த மாணவி அறிந்தார் மேலும் தனது மாமியார் வரதட்சணையாக ரூபாய் 5 லட்சம் கேட்டுள்ளார்.

மறுபுறம், கணவர், மாணவியின் படிப்புக்கு நிதியுதவி செய்ததாகவும், இது காதல் திருமணம் என்றும் கட்டாய திருமணம் அல்ல என்றும் நீதிமன்றத்தில் கூறினார். மனைவியின் கூற்றுகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு அதிகமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் வாதிட்டார்.

வாதங்களை பரிசீலித்த பெஞ்ச்,

இந்த வழக்கில் உண்மைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பெஞ்ச் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

கணவர் சார்பில் வழக்கறிஞர் EKRAMA H QURESHI ஆஜரானார்.

மனைவி சார்பில் வழக்கறிஞர் NISHITH P ACHARYA ஆஜரானார்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *