வருமான வரி சோதனையில் மாட்டிய மாவட்ட ஆட்சியரின் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதி மன்றம்!

வருமான வரி சோதனையில் மாட்டிய மாவட்ட ஆட்சியரின் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதி மன்றம்!
சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் பாபு லால் அகர்வால் என்ற மாவட்ட ஆட்சியர் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது இதில் நிறைய நகைகள் மற்றும் பணங்கள் கண்டறியப்பட்டன. இதனை தொடர்ந்து பாபுலால் அகர்வாலின் சார்டர்ட் அக்கௌன்டன்ட் ஆன சுனில் அகர்வாலின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தியபோது 230 பேங்க் பாஸ் புக்குகள் மற்றும் 13 shell company இவரது கட்டுபாட்டில் இருந்தது மட்டுமின்றி 446 வங்கி கணக்குகள் பன்ட்றி மற்றும் ராம்சாகற்பரா என்ற ஊரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் வேறு வேறு நபர்களின் பெயர்களில் கணக்குகள் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி 13 shell company களில் இருந்து prime ispat pvt ltd என்ற நிறுவனத்திற்கு ரூபாய் முப்பத்து ஒன்பது கோடியே அறுபத்து ஒரு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து ஐநூற்று தொனூதெட்டு பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்பட்டது என்றால் இந்த 13 shell company இன் பங்குகளை prime ispat pvt ltd வாங்கியது போல் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இது தொடர்பாக பாபு லால் அகர்வால் சுனில் அகர்வால் பாபுலால் அகர்வாலின் தம்பிகளான பவன் அகர்வால் அசோக் குமார் அகர்வால் மற்றும் வங்கி ஊழியர்களின் மீது இவ்வாறு செய்ததற்காக ipc பிரிவு 420( மோசடி செய்ததற்கு 7வருடம் சிறை), 468(பொய்யாக ஆவணம் புனையப்பட்டது 7 வருடம் சிறை), 471( பொய்யாக புனையப்பட்ட ஆவணத்தை உண்மையானதாக உபயோகம் செய்தல்) ,prevention of money launderin act ன் கீழ் பிரிவு 45( கருப்பு பணம் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து இவர்கள் மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகினர். Justice M.R.Shah மற்றும் justice Sudhanshu dhulia தலைமையில் இது விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் குற்றவாளிகள் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *