விளையாட்டு மைதானம் இல்லாமல் பள்ளி இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
ஹரியானாவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்ற உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானங்கள் தேவை என்றும் அதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நல்ல சூழல் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எடுத்துரைத்தது. [ஹரியானா மாநிலம் மற்றும் OR vs சத்பால் மற்றும் ors]
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா அடங்கிய பெஞ்ச், பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போது பள்ளியில் விளையாட்டு மைதானங்கள் எவ்வளவு முக்கியம் என்று எடுத்துரைத்தனர்.
எனவே, அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நபர்கள் 12 மாதங்களுக்குள் அந்த இடத்தை காலி செய்யுமாறும் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பள்ளிக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவதற்கு வழி வகுத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் 2016 ஆம் ஆண்டு உத்தரவை எதிர்த்து ஹரியானா அரசு மேல்முறையீடு செய்ததில் இந்தத் தீர்ப்பு வந்தது.
உயர் நீதிமன்றத்தின் முன், எதிர்மனுதாரர்கள் (தனியார்) ஆக்கிரமிப்பு நிலத்தின் மீதான உடைமைக்கு பதிலாக கிராம பஞ்சாயத்துக்கு இரட்டிப்பு நிலத்தை வழங்க முன்வந்தனர், அல்லது அந்த நிலத்திற்கான சந்தை மதிப்பு எவ்வளவோ அதனை கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர் ஆனால் இதை விசாரித்த உச்ச நீதிமன்றமோ ஆக்கிரமிப்பு செய்த இடத்தைத் தவிர எந்த இடமும் பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக இருக்க முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்
உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
.
அரியானா மாநிலம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராகேஷ் முத்கல், வழக்கறிஞர்கள் சமர் விஜய் சிங், அம்ரிதா வர்மா, கேசவ் மிட்டல், சபர்னி சோம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கறிஞர்கள் சுரேந்தர் தேஸ்வால், அபய நாத் தாஸ், எஸ்.எஸ்.பந்தோபாத்யாய், பீனா, ராகுல் சிங், வி.கே.சுக்லா, ரியா சோனி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதாடினர்.