சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புதிதாக யானைகளை தனி நபரோ, மத நிறுவனங்களோ வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
தனியார் உரிமையாளரின் பராமரிப்பில் காயமடைந்த 60 வயது லலிதா என்ற பெண் யானை குறித்து வனத்துறை தாக்கல் செய்த வழக்கில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நீதிபதி சுவாமிநாதன், விலங்குகள் நல ஆர்வலர்களுடன் சமீபத்தில் யானையை பார்வையிட்டார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கோவில் விழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது யானை சரிந்து விழுந்ததையடுத்து, இதற்கு முன்னர் 9 டிசம்பர் 2022 அன்று ராஜபாளையத்தில் அந்த யானை முதன்முதலில் விழுந்தது .சிகிச்சைக்கு பின், யானையை அரசு யானைகள் மறுவாழ்வு முகாமுக்கு மாற்ற உத்தரவிட்டார்.பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயிலைச் சேர்ந்த 32 வயது பெண் யானை லட்சுமியின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக PETA மேல் கோயில் ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து யானைகளையும் தனியாருக்குச் சொந்தமானதா அல்லது கோயில்களுக்குச் சொந்தமானதா என்பதை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளருக்கு அவர் உத்தரவிட்டார்.
.