11 மாதங்களுக்கு மட்டும் வாடகை ஒப்பந்தங்கள் செய்யப்படுவது ஏன் என்று தெரியுமா?

11 மாதங்களுக்கு மட்டும் வாடகை ஒப்பந்தங்கள் செய்யப்படுவது ஏன் என்று தெரியுமா?

தமிழகத்தில் பொதுவாக வீடு வாடகைக்கு செல்லும் பொழுது அந்த வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு செல்பவரிடம் ஒப்பந்தம் செய்யும் பொழுது 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். ஏன் வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு மட்டும் போடப்படுகிறது என்று எப்பொழுது நீங்கள் சிந்தித்ததுண்டா? வாடகை ஒப்பந்தம் என்பது அந்த வீட்டின் உரிமையாளருக்கும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு செல்பவருக்கும் இடையிலான ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். இவர்களுக்கிடையே ஏதாவது தகராறு ஏற்பட்டால் அந்த வாடகை ஒப்பந்தமே ஆதரமாக செயல்படும்.
இப்படி இருவருக்கும் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக காணப்படும் அந்த வாடகை ஒப்பந்தம் ஏன் 11 மாணவர்களுக்கு போடப்படுகிறது?

வாடகை ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால் ஒப்பந்தத்தை பத்திரப்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவு கொண்ட வாடகை ஒப்பந்தத்தை 1908 ஆம் ஆண்டு பதிவு சட்டத்தின் பிரிவு 17 கீழ் பதிவு செய்யப்பட அவசியம் இல்லை. வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின் அடிப்படையில் 11 மாத வாடகை ஒப்பந்தத்தை உருவாக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை மேலும் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு செய்தார்கள் என்றால் அப்பொழுதும் ரூபாய் 100 முத்திரைத்தாளை பயன்படுத்தி பழைய வாடகை ஒப்பந்தத்தை புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம்.11 மாதங்களுக்கு மேலாக உருவாக்கப்படும் வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டி இருக்கும் ஆதலால் பொதுவாக இட உரிமையாளர்கள் வாடகைக்கு விடும் பொழுது 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *