ஆவணங்களை பதிவு செய்ய வரும் பொழுது லஞ்சம் கேட்டால் புகார் செய்வதற்காக மொபைல் எண்கள்

தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கொடுப்பது வழக்கமாக உள்ள நிலையில் தமிழக அரசு இதை தடுப்பதற்காக ஆவணங்களை பதிவு செய்ய வரும் பொழுது லஞ்சம் கேட்டால் புகார் செய்வதற்காக மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த வருடம் சார்ப்பாதிவாளர் அலுவலகங்களில் பலமுறை லஞ்ச ஒழிப்பு துறை மூலம் அதிரடி சோதனை நடந்துள்ளது எடுத்துக்காட்டாக சில:

Nov 2 /2023,   வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை,

மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை  அதிகாலை 3 மணி வரை நடந்தது. தொடர்ந்து 9 மணி நேரம் விடிய விடிய நடந்த இந்த அதிரடி சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 800 ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.

March 15/2023தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை… புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் நடைபெறும் அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

October 21 லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ராமநாதபுரம் சார் பதிவாளரிடம் ரூ.14 லட்சம் பறிமுதல்.

இனிமேல் இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ, சார் பதிவாளர்களோ, அதற்கு மேல்நிலை அலுவலர்களோ, ஆவணப் பதிவுக்காக லஞ்சம் கேட்டால், 94984 52110, 94984 52120, 94984 52130 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது  [email protected] என்ற இமெயில் முகவரியில் பதிவுத் துறை செயலருக்கு நேரடியாக புகார் அனுப்பலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *