லஞ்ச பணத்தை மறைக்க வாயில் போட்டு மென்ற சப்-இன்ஸ்பெக்டர்:
நாமக்கல்லில் இருந்து வேலை நிமித்தமாக ஈரோடு வந்த பிரகாஷ் வயது 42 , மேட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை அவர் வந்த வண்டியில் மோதியுள்ளார், இதனால் கீழே விழுந்த மூதாட்டியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் பிரகாஷ், பின்னர் அந்த தகவலை அந்த மூதாட்டியின் சொந்தக்காரர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் வரவழைத்துள்ளார். சிறு காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ உதவி பெற்ற பின்னர் அந்த மூதாட்டியும் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அந்த இளைஞர் பிரகாஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டு ஜாமீன் தாரர்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை எடுத்து காவல் நிலையத்திற்கு வரும்படி கூறியுள்ளார், அதன் பின் காவல் நிலையம் வந்த பிரகாஷ் சட்டப்படி உள்ள நடைமுறைகளை முடித்த பின்னர் மேலும் மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சில நடைமுறைகள் உள்ளன என்று அங்கும் அழைத்து சென்று பணம் வாங்கி உள்ளார் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், அதன் பின்னரும் வண்டியை தராமல் மீண்டும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார், பிறகு தனக்கு ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளார் இதனால் மனமுடைந்த பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார், அதன் பின்னர் அவர்கள் கூறியபடி ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரிடம் கொடுத்துள்ளார் பிரகாஷ் , அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கையும், களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வாங்கிய பணத்தை உடனடியாக வாயில் போட்டு மென்று மறைக்க முயன்றார் ,. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பணத்தை மீட்டு, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை கைது செய்தனர். இதன் பின்னர் கோவை D.I.G உத்தரவின்படி ஈரோடு S.P ஜவகர், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.
லஞ்சம் என்ற புற்றுநோயை தடுப்பது எப்படி?
ஒரு அரசு அதிகாரி தன் வேலையை செய்வதற்காக லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்தால் மக்கள் www.dvac.tn.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று புகார் செய்யலாம்.