குடித்துவிட்டு நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் தகராறு : ஒராண்டு சிறை

குடித்துவிட்டு நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் தகராறு : ஒராண்டு சிறை

சென்னை அல்லி குளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி .ஹச். முகமது பாரூக் முன் விசாரணைக்கு வந்த வழக்கில் மதுபோதையில் நடைபாதையில் வியாபாரம் செய்த பெண்ணிடம் தகராறு செய்த வழக்கில் அந்த நபருக்கு ஓராண்டு தண்டனை மற்றும் 10,500 ரூபாய் அபராதம் விதித்தார், மேலும் இந்த அபராத தொகையில் ரூபாய் 10,000 அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரியில் சென்னை அசோக் நகரில் மூன்றாவது அவென்யூ நடைபாதையில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வரும் பெண்ணிடம் அதே அசோக் நகரில் உள்ள புதூர் பகுதியை சேர்ந்த டைமண்ட் பாபு என்பவர் குடித்துவிட்டு போதையில் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார், அந்தப் பெண்ணை அசிங்கமாக பேசி கையைப் பிடித்து கீழே தள்ளி உள்ளார், மேலும் கடையில் உள்ள எண்ணெய் சட்டியை எட்டி உதைத்துள்ளார், இதனால் பாதிப்படைந்த அந்த பெண் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார், இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இப்பொழுது அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி டி.ஹச். முகமது ஃபாரூக் இந்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10,500 அபராதம் விதித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *