அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்கள் மோசடி: குற்றவாளிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை

வேலை வாங்கித் தருவதாக பல லட்சங்களை ஏமாற்றுபவர்களை விசாரிப்பது காவல்துறையைச் சேர்ந்த மத்திய குற்ற பிரிவு CCB CENTRAL CRIME BRANCH.

கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த முரளிதரன் (58) என்பவர் ஆவடியை சேர்ந்த வேலம்மாள் (71) என்பவரின் மருமகளுக்கு அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி 22 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கி உள்ளார், பின்னர் வேலம்மாள் தனது மருமகளுக்கு பணி நிரந்தர உத்தரவு பற்றி கேட்டுள்ளார், வேலம்மாள் வேலையைப் பற்றி கேட்கும் பொழுது முரளிதரன் மாற்றி மாற்றி பதில்கள் கூறியுள்ளார், அவர் பேச்சிலிருந்து தன்னை முரளிதரன் ஏமாற்றுகிறார் என்பதை தெரிந்து கொண்ட மேலம்மாள் முரளிதரனை பற்றி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார், அந்தப் புகாரை பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு முரளிதரனை கைது செய்தது, இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 ல் நடைபெற்று வந்தது, இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார், இதில் பாதிக்கப்பட்ட வேலம்மாளுக்கு 33 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்றும் குற்றவாளி முரளிதரனுக்கு மூன்றாண்டு சிறு தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *