தரமற்ற உணவுப்பொருட்களைப்பற்றி எங்கே புகார் செய்வது?

தரமற்ற உணவுப்பொருட்களைப்பற்றி எங்கே புகார் செய்வது?

 

தமிழகத்தில் உணவுப்பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் FSSAI (FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA) எனப்படும் உணவுப்பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்ற பின்னரே அந்த உணவு பொருளை விற்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் பல நேரங்களில் உணவை மொபைல் செயலி மூலமாக ஆர்டர் செய்து வரவழைத்துக் கொள்கிறோம், அதேபோல் எங்கே நல்ல உணவு கிடைக்கும் என்பதை YOUTUBE மற்றும் பல செயலிகள் மூலமாக மக்கள் அறிந்து ஆர்டர் செய்து வரவழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி ஆர்டர் செய்து அல்லது அங்கு சென்று சாப்பிடும் பொழுது அது தரமற்ற உணவாக இருக்கும் பொழுது எங்கு புகார் செய்ய வேண்டும் என்று கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது.

அதற்காக அரசாங்கம் உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களது புகாரை வாட்ஸ் அப் மூலமாக பதிவு செய்ய 9444042322 என்ற மொபைல் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் www.foodsafety.tn.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் மற்றும் TN FOODSAFETY CONSUMER APP என்ற மொபைல் போன் செயலி மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *